மராட்டியம்: கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி
ஆற்றில் கவிழ்ந்த காரை கிரேன் உதவியுடம் மீட்பு குழுவினர் மீட்டனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் ரத்னகிரியில் உள்ள மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 6 பேர் பயணம் செய்தனர். இவர்கள் மும்பையில் இருந்து தேவ்ருக் நகருக்கு சென்றுகொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை மும்பை-கோவா நெடுஞ்சாலையில் ஜக்புடி ஆற்றின் பாலத்தில் கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ஜக்புடி ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் காரில் இருந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கிரேன் உதவியுடன் காரை மீட்டனர். இந்த விபத்தில் டிரைவர் மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.