நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-11-17 01:19 IST

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சுனில் நாராயணன் (வயது 26). இவருக்கு 19 வயதில் மனைவி இருந்தார். இதனிடையே, மனைவியின் நடத்தையில் சுனிலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சுனில் நாராயணன் நேற்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, சுனில் தனது மனைவியுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவியை சுனில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்