பஞ்சாப்: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த நபர் கைது - 6 கைத்துப்பாக்கிகள் பறிமுதல்

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பை பயங்கரவாத இயக்கமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.;

Update:2025-06-21 16:07 IST

சண்டிகர்,

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பை பயங்கரவாத இயக்கமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இயக்கத்தின் கிளை அமைப்பான அனைத்துலக பாபர் கால்சா என்ற அமைப்பும் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பஞ்சாப்பில் மறைமுகமாவும், கனடா போன்ற நாட்டிலும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப்பின் அமர்தசரஸ் பகுதியை சேர்ந்த நபருக்கும் அனைத்துலக பாபர் கால்சா பயங்கரவாத அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் அமர்தசரசில் சோதனை நடத்திய போலீசார், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அன்ஹர் சிங் என்ற நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 6 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்