ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை சென்ற ரெயிலில் திடீர் என்ஜின் பழுது
யில்வே ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.;
சிவகங்கை,
ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 7.40 மணிக்கு சிவகங்கைக்கு வரும். ஆனால், நேற்று இரவு 8 மணி அளவில் சிவகங்கை வந்தது. அப்போது திடீரென என்ஜின் பழுதாகி நின்றது. இதனால் பாதி பெட்டிகள் ரெயில் நிலையத்துக்கு உள்ளேயும், மீதி பெட்டிகள் தொண்டி சாலை ரெயில்வே மேம்பாலம் வரையும் நின்றன. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாகியும் இந்த என்ஜின் பழுதை சரிசெய்ய முடியவில்லை.
இதனால் காரைக்குடியில் இருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு சுமார் 1½ மணி நேரம் தாமதமாக இரவு 9.10 மணி அளவில் ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.