ஆந்திரா: மின் கசிவால் தீ விபத்து - 40 வீடுகள் எரிந்து நாசம்

தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்;

Update:2026-01-13 19:57 IST

அமராவதி,

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் சர்லங்கா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100க்கும் குடிசை வீடுகள் உள்ளன.

இந்நிலையில், இந்த கிராமத்தில் உள்ள குடிசை வீட்டில் நேற்று இரவு மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென அருகில் உள்ள குடிசை வீடுகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் 40 வீடுகள் எரிந்து நாசமாகின.

தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், பற்றி எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் போன்ற பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்