மிசோரமில் ரூ.173.73 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்

மிசோரமில் ரூ.173.73 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-02-12 10:19 IST

ஐஸ்வால்,

மிசோரமின் சாம்பாய் மாவட்டத்தில் உள்ள இந்தியா-மியான்மர் எல்லையில் போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பதாக மிரோரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கடந்த 9ம் தேதி, அப்பகுதியில் அசாம் ரைபிள்ஸ் மற்றும் மிசோரம் போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் ஜோகாவ்தரில் உள்ள எல்லை கடக்கும் இடத்தில் ரூ. 173.73 கோடி மதிப்பிலான மெத்தம்பேட்டமைன் மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் போதை மாத்திரைகளை கடத்த முயன்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்