தீவிரமடையும் காற்று மாசு: விவாதம் நடத்த ராகுல் காந்தி விடுத்த அழைப்பை ஏற்றது மத்திய அரசு...!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.;

Update:2025-12-12 13:09 IST

டெல்லி,

தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து சுவாசிக்க தகுதி அற்றதாக நிலவி வருகிறது. காற்று மாசுபாட்டால் முதியோர், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், நாட்டில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் யாரையும் குறைகூறாமல் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த மத்திய அரசு முன்வரவேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.

ராகுல் காந்தியின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, காற்று மாசுபாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரைவில் விவாதம் நடத்தப்படும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்