ம.பி.: எய்ம்ஸ் மருத்துவமனையின் லிப்டில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

எய்ம்ஸ் போன்ற பாதுகாப்பு நிறைந்த வளாகத்தில், நடந்துள்ள இதுபோன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2026-01-27 22:11 IST

போபால்,

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் லிப்டின் உள்ளே பெண் ஒருவர் செல்லும்போது, முக கவசம் அணிந்து அவரை பின்தொடர்ந்த மர்ம நபர் ஒருவரும் லிப்டிற்குள் சென்றார்.

இந்த நிலையில், லிப்டின் கதவு திறந்ததும் அந்நபர், பெண்ணின் சங்கிலியை பறித்து கொண்டு, படியின் வழியே தப்பியோடினார். இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் பற்றி அந்த பெண், பக்சேவானியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார், இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் கவுதம் சோலங்கி கூறியுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனையானது பாதுகாப்பு நிறைந்த வளாக பகுதியாகும். அதில், இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்