கடும் வெப்பம்: பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் கலந்துகொண்ட 625 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.;
பூரி,
ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் கோவில் உள்ளது. இங்கு உலகப்புகழ் பெற்ற ரத யாத்திரை நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் கலந்து கொண்ட 625 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடும் வெப்பம் உள்பட பல்வேறு காரணங்களால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 625 பேருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. இதில் 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.