முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு

முதுகலை நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.;

Update:2025-06-02 19:25 IST

புதுடெல்லி,

வருகிற ஜூன் 15ஆம் தேதி நீட் முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 2,42, 678 தேர்வர்கள் நீட் முதுகலைத் தேர்வை எழுத உள்ளனர். தேர்வு இரண்டு ஷிப்டுகளாகத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து மருத்துவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ வாரியம் தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, ஒரே ஷிப்ட்டில் தேர்வை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், ஜூன் 15ஆம் தேதி 2 கட்டங்களாக நடைபெறவிருந்த நீட் முதுநிலைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. நீட் முதுநிலை தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், ஒரே கட்டமாக ஆன்லைனில் தேர்வுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் தேவை என்பதால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்