நியூசிலாந்து துணை பிரதமர் இந்தியாவுக்கு வருகை

நியூசிலாந்து துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், மத்திய மந்திரி ஜே.பி. நட்டாவை நாளை தாஜ்மகால் ஓட்டலில் சந்தித்து பேசுகிறார்.;

Update:2025-05-29 21:32 IST

புதுடெல்லி,

நியூசிலாந்து துணை பிரதமர் மற்றும் வெளியுறவு துறை மந்திரியான வின்ஸ்டன் பீட்டர்ஸ் நேபாள நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் அதனை முடித்து விட்டு, இந்தியாவுக்கு 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக புதுடெல்லிக்கு இன்று வந்தடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரை வெளியுறவு செயலாளர் அம்ரித் பகதூர் ராய், விமான நிலையத்தில் வரவேற்றார். அவருடன் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் இருந்தனர்.

இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடகத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான இனிய மற்றும் நட்புரீதியிலான உறவை வலுப்படுத்தும் வகையில் அவருடைய வருகை அமைந்துள்ளது என பதிவிட்டு உள்ளார்.

இந்த பயணத்தில் பீட்டர்ஸ், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல மந்திரி ஜே.பி. நட்டாவை நாளை பிற்பகல் 3.30 மணியளவில் தாஜ்மகால் ஓட்டலில் சந்தித்து பேசுகிறார். இதன்பின்னர், அன்றிரவு 9.55 மணியளவில் ஓட்டலில் இருந்து புறப்படுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்