ஒடிசா: பாரதீப் மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து; 17 படகுகள் எரிந்து சேதம்

ஒடிசாவில் பாரதீப் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 17 படகுகள் எரிந்து சேதம் அடைந்தன.;

Update:2025-03-07 05:32 IST

பாரதீப்,

ஒடிசாவில் பாரதீப் நகரில் உள்ள நேரு பங்லா மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 12 பெரிய படகுகள் மற்றும் 5 இயந்திர படகுகள் என மொத்தம் 17 படகுகள் தீயில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென தெரியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் 10 பேர் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். ஒரு படகில் பற்றிய தீ, அடுத்தடுத்து பரவி 17 படகுகள் எரிந்து போயின.

சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் டீசல் டேங்குகள் வெடித்ததில் நிலைமை மோசமடைந்தது. ஒவ்வொரு படகிலும் 3 ஆயிரம் லிட்டர் டீசல், மீன்பிடி சாதனம் ஆகியவை இருந்துள்ளன. இதனால், தீப்பற்றி எரிய கூடிய ஆபத்து நிறைந்த சூழல் ஏற்பட்டது என தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்