பவன் கல்யாண் புகைப்படம் மார்பிங் - 3 பேர் கைது

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் புகைப்படங்களை மார்பிங் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2025-06-25 15:33 IST

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட யோகா தின விழா நடைபெற்றது. ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், யோகா தின விழாவில் எடுக்கப்பட்ட நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாணின் புகைப்படங்களை மார்பிங் செய்து, சமூக ஊடகத்தில் ஒரு சிலர் பதிவிட்டுள்ளனர். அதில் பவன் கல்யாணை டேக் செய்து, அவரை பற்றிய அவதூறு கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக, கோனசீமாவைச் சேர்ந்த சாய் வர்மா, மச்சிலிப்பட்டினத்தைச் சேர்ந்த ராமாஞ்சனேயுலு, ஐதராபாத்தைச் சேர்ந்த ஷேக் மஹ்பூ ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்