‘கேரளாவில் நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்’ - மத்திய மந்திரி சுரேஷ் கோபி

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம் என சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-01 16:04 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் குருவாயூரில் இன்று மத்திய மந்திரி சுரேஷ் கோபி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் 2026-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரக்கூடிய திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

“கேரளாவில் தடயவியல் ஆய்வகம் அமைப்பதற்கான திட்டம் முன்மொழியப்பட்டது. அதற்கான ஆவணங்களும் உள்ளன. ஆனால் அத்திட்டம் கைவிடப்பட்டுவிட்டது. இருப்பினும் கேரளாவிற்கு விரைவில் மற்றொரு பெரிய திட்டம் வர இருக்கிறது.

மத்திய மந்திரி அமித்ஷா ஒரு பெரிய திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அதற்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கேரளாவில் நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும். அது யாருடைய தனிப்பட்ட திறமையாலும் அல்ல, அதன் இயல்பான வழியில் வரும்.

2015 முதல் எய்ம்ஸ் குறித்து நிலையான நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறேன். ஆலப்புழாவில் எய்ம்ஸ் நிறுவப்படவில்லை என்றாலும், திருச்சூருக்கு அது மிகவும் தேவையானது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்