ஜனாதிபதி முர்மு உத்தரகாண்ட் பயணம்; பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு

ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று உத்தரகாண்ட் சென்றுள்ளார்.;

Update:2025-11-02 14:52 IST

டெராடூன்,

ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று உத்தரகாண்ட் சென்றுள்ளார். டெராடூன் விமான நிலையம் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, கவர்னர் குர்மித் சிங் வரவேற்றனர்.

அதன்பினர் ஹரித்துவார் சென்ற திரவுபதி முர்மு அங்குள்ள பதஞ்சலி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

இதனிடையே, பயணத்தின் 2வது நாளான நாளை உத்தரகாண்ட் சட்டசபையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு உரையாற்றுகிறார். அதே நாளில், நைனிடால் ராஜ்பவனின் 125-வது ஆண்டு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து 4ம் தேதி நீம் கரோலி பாபா ஆசிரத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு செல்கிறார். பின்னர் நைனிடாலில் உள்ள குமான் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு ஜனாதிபதி டெல்லி திரும்புகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்