மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதியின் ஜலந்தர் பயணம் ரத்து

பஞ்சாப்பில் உள்ள பல்வேறு நகரங்களில் அடர்ந்த மூடுபனி சூழந்து காணப்படுகிறது.;

Update:2026-01-16 16:58 IST

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் 21-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக இன்று பங்கேற்க இருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பஞ்சாப்பில் பல்வேறு நகரங்களில் அடர்ந்த மூடுபனி சூழந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமிர்தசரஸ் நகரில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி நேற்று கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து நேற்று மாலை பஞ்சாப் அரசு சார்பில் ஜனாதிபதிக்கு இரவு விருந்து வழங்கப்பட்டது. இதில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த மான், கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்