திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன; அமித் ஷா
திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என அமித் ஷா தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.
திருவள்ளுவர் அவர்களின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன, மேலும் பக்திமிகு வாழ்க்கைக்கும் இணக்கமான சமூகத்திற்கும் வழி வகுத்தன. அவரது மரபு நமது மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து நம்மை வழிநடத்தும்.என தெரிவித்துள்ளார்.