கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கியவரிடம் பண மோசடி: கலால்துறை அதிகாரிகள் 3 பேர் பணியிடை நீக்கம்
கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கியவரை ஏமாற்றி ரூ.10 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.;
எர்ணாகுளம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் கலால் துறை அலுவலகத்தில் ஆய்வாளராக இருப்பவர் வினோத். இங்கு கடத்தல் தடுப்பு அதிகாரியாக ஜஸ்டின் சர்ச்சில், ஊழியராக சிபின் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் 3 பேரும், கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கிய வடமாநில தொழிலாளி ஒருவரிடம் இருந்து கோர்ட்டில் பணம் செலுத்த ரூ.10 ஆயிரம் வேண்டும் என கூறியுள்ளனர். இதை நம்பிய அந்த நபர் ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், இதுகுறித்து கலால் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
அதன் பேரில் கலால் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கியவரை ஏமாற்றி ரூ.10 ஆயிரம் மோசடி செய்ததும், அதை கலால் துறை ஆய்வாளர் வினோத், ஜஸ்டின் சர்ச்சில், சிபின் ஆகிய 3 பேரும் பங்கிட்டு கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.