ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விடுவிப்பு

ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விடுவிக்கப்பட்டார்.;

Update:2026-01-16 07:59 IST

அமராவதி,

ஆந்திர முதல்-மந்திரியாக ஜெகன்மோகன் ரெட்டி இருந்த போது, சந்திரபாபு நாயுடு மீது ஆந்திர திறன் மேம்பாட்டு நிறுவன நிதி ரூ.300 கோடியை மோசடி செய்து அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 2023-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் 2024-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்-மந்திரி ஆனார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்து வந்த ஆந்திர போலீசார், சந்திரபாபு நாயுடு மீது குற்றம் எதுவும் இல்லை என கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, ஊழல் வழக்கில் இருந்து சந்திரபாபு நாயுடுவை விடுவித்து உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்