பிரதமர் மோடி 4 இடங்களில் பிரசாரம்

பிரதமர் மோடி, நவம்பர் 2, 3, 6 மற்றும் 7-ந் தேதிகளிலும் பிரசார கூட்டங்களில் பங்கேற்கிறார்.;

Update:2025-10-20 05:30 IST

புதுடெல்லி,

பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, பிரதமர் மோடி இந்த வாரம் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.அவரது முதலாவது பிரசார கூட்டம், 24-ந் தேதி சமஷ்டிபூரில் நடக்கிறது. அதே நாளில் பெகுசாரையிலும் அவர் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார். பின்னர், 30-ந் தேதி, முசாபர்பூர், சாப்ரா ஆகிய நகரங்களில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசுகிறார்.

சமஷ்டிபூரில் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பு, மறைந்த முன்னாள் முதல்-மந்திரி பாரத ரத்னா கர்பூரி தாக்கூரின் பிறந்த கிராமத்துக்கு சென்று அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்துகிறார். பிரதமர் மோடி, நவம்பர் 2, 3, 6 மற்றும் 7-ந் தேதிகளிலும் பிரசார கூட்டங்களில் பங்கேற்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்