உத்தர பிரதேச மருத்துவமனையில் பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்த தூய்மை பணியாளர் கைது

தூய்மை பணியாளர் அந்த பெண்ணை மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.;

Update:2025-10-27 20:44 IST

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளி ஒருவருக்கு உதவியாக அவரது குடும்பத்தை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம், மருத்துவமனைக்கு அருகில் உள்ள மதுக்கடையில் அந்த பெண் மது வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது.

மதுவை குடித்துவிட்டு சிறிது நேரத்தில் அந்த பெண் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு, அவரது உறவினர் இருந்த அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அதனை தொடர்ந்து இன்று காலை அந்த பெண் கண்விழித்துள்ளார். அப்போது அங்கிருந்த தூய்மை பணியாளர் ஜெய்சங்கர்(வயது 25) என்பவரிடம், தனது உறவினர் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு தன்னை அழைத்து செல்லுமாறு கூறியிருக்கிறார்.

ஆனால் தூய்மை பணியாளர் அந்த பெண்ணை மருத்துவமனையின் 3-வது மாடியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி தூய்மை பணியாளர் ஜெய்சங்கரை கைது செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்