மது வாங்க பணம் தர மறுத்த தாயை அடித்துக்கொன்ற மகன் கைது

கோழிக்கோடு அருகே மது வாங்க பணம் தர மறுத்த தாயை அடித்துக்கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.;

Update:2025-08-10 14:02 IST

பெரும்பாவூர்,

கோழிக்கோடு மாவட்டம் பேராம்பரா அருகே கூத்தாளி பகுதியை சேர்ந்தவர் லினிஷ்(வயது 42). இவரது தாயார் பத்மாவதி(65). இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி பத்மாவதி வீட்டில் சுய நினைவிழந்து கிடந்ததாக கூறி பேராம்பரா துவக்க நிலை சுகாதார மையத்திற்கு லினிஷ் கொண்டு வந்தார். அங்கு அவருக்கு முதலுதவி தரப்பட்டு கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறிய அக்கம்பக்கத்தினர் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் பேராம்பரா போலீசார் லினிஷிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதைக்கு அடிமையான லினிஷ் சம்பவத்தன்று பத்மாவதியிடம் மது வாங்க பணம் கேட்டதும், அதற்கு மறுத்ததால் அவரை தாக்கி நகைகளை பறித்து கொண்டு சென்றதும், சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்த அவர் மயங்கி கிடந்த பத்மாவதியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதும், அங்கு அவர் இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பத்மாவதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் லினிஷ் தாக்கியதில் அவர் உயிரிழந்தது உறுதியானது. இதையடுத்து பேராம்பரா போலீசார் வழக்குப்பதிவு செய்து, லினிஷை கைது செய்தனர். தொடர்ந்து அவர் கோழிக்கோடு முதல் வகுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்