தமிழ்நாட்டில் கொடிகம்பங்களை அகற்ற இடைக்கால தடை; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.;

Update:2025-08-25 20:57 IST

புது டெல்லி,

தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள், ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி அரசியல் கட்சி கொடி கம்பங்கள், சாதி மற்றும் பல்வேறு அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்ற சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

சாலை ஓரங்களில் கொடி கம்பங்களை அமைக்ககூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.அனைத்து கொடிக்கம்பங்களை அகற்ற வில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நேரிடும் என்றும் ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கொடி கம்பங்களை அகற்ற கூடாது என உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாட்டில் கொடிகம்பங்களை அகற்றுவதற்கான உத்தரவுக்கு இடைக்க்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

Tags:    

மேலும் செய்திகள்