எனக்கு நீதி வேண்டும்... நிழலுலக தாதா ஹாஜி மஸ்தானின் மகள் பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் உதவி கேட்டு உருக்கம்
வாழ்க்கை போராட்டத்தில் நீதி கோரி கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார்.;
புனே,
நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியாக செயல்பட்டவர் ஹாஜி மஸ்தான் மிர்சா. தமிழகத்தில் இருந்து மும்பை சென்ற அவர், ரியல் எஸ்டேட் தொழிலுடன் கடல்சார் கடத்தல் தொழிலிலும் ஈடுபட்டார். தொழிலதிபராக அறியப்பட்ட அவர், மற்ற தாதாக்களுடன் தொடர்பில் இருந்தவர். பாலிவுட் நடிகர்கள் பலருடனும் சந்தித்து பேசும் வழக்கம் கொண்டவர்.
1994-ம் ஆண்டு ஜூனில் மரணம் அடைந்த இவருடைய மகள் ஹசீன் மஸ்தான் மிர்சா. சிறு வயதில் இவருடைய சம்மதம் இல்லாமல் மாமா மகனுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். அவர் ஏற்கனவே 8 முறை திருமணம் ஆனவர். ஹசீனை தவறாக பயன்படுத்தி கொண்டார். அவருடைய சொத்துகளையும் பறிமுதல் செய்து கொண்டார். கடுமையான மன உளைச்சலால் ஹசீன் 3 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, பலாத்காரம், கொலை முயற்சி, என்னுடைய சொத்துகளை பறித்து கொண்டும் பல வழிகளில் தீங்கிழைத்துள்ளனர். மாமா மகன் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து, மரணம் அடையும்படி விட்டு விட்டு சென்று விட்டார். அப்போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? என போலீசார் கூட என்னிடம் கேட்கின்றனர். தற்போது வளர்ந்து பெரியவளாகி விட்டேன்.
ஒருவரும் என்னை ஆதரிக்கவில்லை. அப்போது குழந்தையாக இருந்தேன். வீட்டை விட்டு வெளியே தூக்கியெறிந்தபோது, ஒருவரும் எனக்கு ஆதரவு அளிக்கவில்லை என கூறினார்.
நான், மத்திய மந்திரி அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி இருவருக்கும் வேண்டுகோள் வைக்கிறேன் என கூறியுள்ளார். வாழ்க்கை போராட்டத்தில் நீதி கோரி கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
பிரதமர் மோடியின் முத்தலாக்கை புகழ்ந்த அவர், இதுபோன்ற வழக்குகளில் உடனடி நீதிக்காக கடுமையான சட்டங்கள் இருப்பது தேவையாக உள்ளது என்றும் கேட்டு கொண்டார். 2 ஆண்டுகளாக தந்தை மறைந்தது தெரியாமல் அவர் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்.