அசாமில் புதிய முனையம் தொடக்கம்; பொருளாதாரம். சுற்றுலா மேம்படும்: பிரதமர் மோடி

புதிய முனைய கட்டிட கட்டுமானத்தில், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, இயற்கையுடனான தொடர்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை பராமரிக்கப்பட்டு உள்ளன.;

Update:2025-12-21 05:41 IST

கவுகாத்தி,

அசாமின் கவுகாத்தி நகரில் லோகபிரியா கோபிநாத் பர்தலோய் சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பில் புதிய முனைய கட்டிடம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து, திரளாக கூடியிருந்த கூட்டத்தினரின் முன் பேசினார். அப்போது அவர், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் இந்தியாவின் வளர்ச்சிக்கான புதிய நுழைவுவாயிலாக உருவெடுத்து வருகின்றன என பெருமையுடன் கூறினார்.

முன்னேற்றத்திற்கான ஒளி மக்களை வந்தடையும்போது, வாழ்வின் ஒவ்வொரு பாதையும் புதிய உச்சங்களை தொட தொடங்குகிறது என கூறினார். அசாம் வளர்ச்சியில் மீண்டும் புதியதோர் அத்தியாயம் சேர்ந்துள்ளது என்றும் அவர் அப்போது சுட்டி காட்டினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்திற்கான கட்டிடம் உருவாகியுள்ளது. இதனால், உள்ளூர் பொருளாதாரம் மேம்படும். சுற்றுலாவையும் அது ஊக்குவிக்கும் என தெரிவித்து உள்ளார்.

கட்டிட கட்டுமானத்தில், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, இயற்கையுடனான தொடர்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை பராமரிக்கப்பட்டு உள்ளன. இதனை அவர் பாராட்டி உள்ளார். கவுகாத்திக்கு இது ஒரு சிறப்பான நாள். இது பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்