உண்மை அன்புக்கான சான்று 'தாஜ்மகால்' - ஜே.டி.வான்ஸ் புகழாரம்
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தாஜ்மஹாலை கண்டு ரசித்தார்.;
லக்னோ,
தாஜ்மகால் உண்மையான அன்புக்கான சான்று என்று அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் புகழ்ந்துள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் தனது மூன்று குழந்தைகளுடன் தாஜ்மகாலை பார்வையிட்டார். இதற்காக நேற்று ஜெய்ப்பூரில் இருந்து ஆக்ரா விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய அவரை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து தாஜ்மகால் வரை துணை அதிபர் வான்ஸ் குடும்பத்தினர் காரில் பயணம் செய்தனர். தாஜ்மகாலை குடும்பத்துடன் வான்ஸ் கண்டு மகிழ்ந்தார். பின்னர் அவர் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில், தாஜ்மகால் அற்புதமானது. உண்மையான அன்புக்கான சான்று, மனித புத்திகூர்மை மற்றும் இந்தியா என்ற மகத்தான நாட்டிற்கான மரியாதை என்று குறிப்பிட்டுள்ளார். துணை அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜெய்ப்பூரில் உள்ள சிட்டி பேலஸ் செல்வதற்கு திட்டமிட்டு இருந்தனர். பின்னர் தங்களது பயணத்தை ரத்து செய்தனர். இன்று அவர்கள் அமெரிக்கா திரும்பி செல்கின்றனர்.