பயிற்சி முடித்த வீரர்களுடன் தண்டால் எடுத்த ராணுவ தளபதி உபேந்திர திவேதி
பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.;
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்த வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி கலந்து கொண்டார். மேலும் பயிற்சி பெற்ற வீரர்களின் குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அணிவகுப்பை கண்டுகளித்தனர்.
தொடர்ந்து பயிற்சி முடித்த வீரர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக வீரர்கள் தண்டால் எடுத்து மகிழ்ந்தனர். அப்போது இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதியும் இளம் வீரர்களுடன் சேர்ந்து உற்சாகமாக தண்டால் எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.