பாஜகவில் இணைந்த பிரபல தெலுங்கு நடிகை...!

நடிகை ஆமணி பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.;

Update:2025-12-20 17:37 IST

ஐதராபாத்,

பிரபல தெலுங்கு நடிகை ஆமணி (வயது 52). பெங்களூருவில் பிறந்த இவர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த நாகர்ஜுனா, பால கிருஷ்ணா, ஜெகபதி பாபு உள்பட பலருடன் நடித்துள்ளார். இவர் கமல்ஹாசனுடனும் நடித்துள்ளார். தமிழிலும் தங்கமான தங்கச்சி, ஆனஸ்ட் ராஜ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஆமணி இன்று பாஜகவில் இணைந்தார். ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, தெலுங்கானா பாஜக தலைவர் ராமசந்திர ராவ் முன்னிலையில் ஆமணி பாஜகவில் இணைந்தார். அவருடன் பிரபல மேக் அப் ஆட்டிஸ்ட் சோபா லதாவும் பாஜகவில் இணைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்