குடியரசு தின பாதுகாப்பு பணியில் சோகம்; காவல் அதிகாரி நெஞ்சு வலியால் பலி - வைரலான வீடியோ

சக அதிகாரிகள் அவரை உடனடியாக மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.;

Update:2026-01-26 20:53 IST

புனே,

மராட்டியத்தின் தாராஷிவ் மாவட்டத்தில் குடியரசு தின பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் இன்று குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் உமர்கா பகுதியில் தல்மோத் சோதனை சாவடியில் காலையில் இருந்து பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். தேசத்திற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதற்காக காவல் அதிகாரிகள் வரிசையாக நின்றனர். அப்போது மோகன் ஜாதவ் என்ற காவல் அதிகாரிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு, சரிந்து விழுந்துள்ளார்.

சக அதிகாரிகள் அவரை உடனடியாக மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

அவருக்கு நடந்த பிரேத பரிசோதனையில் மாரடைப்பு மற்றும் அதனால் நெஞ்சு வலி ஏற்பட்டு உடனே உயிரிழந்து உள்ளார் என தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வைரலானது.

அவருக்கு மக்கள், காவல் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரக்கமும், வேதனையும் தெரிவித்தனர். நாட்டுக்காக கடைசி தருணம் வரை சேவையாற்றிய அவரை இழந்து குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்