உ.பி.: பாலத்தில் கார்-லாரி மோதல்; 8 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் பால விபத்தில் சிக்கியவர்களில் ஒரு குழந்தை உள்பட 2 பேர் இன்று உயிரிழந்தனர்.;
பாராபங்கி,
உத்தர பிரதேசத்தில் பாராபங்கி மாவட்டத்தில் கல்யாணி ஆற்றுப்பாலத்தில் தேவா-பதேப்பூர் (காவல் நிலையம்) பகுதிக்கு உட்பட்ட இடத்தில் கார் மற்றும் லாரி மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள்.
இதனை தொடர்ந்து சிகிச்சைக்காக கொண்டு சென்றவர்களில் ஒரு குழந்தை உள்பட 2 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது. தேவா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்திற்கான காரணம் தெரிய வரவில்லை.