சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள சூர்யகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு? - வெளியான தகவல்
சுப்ரீம் கோட்டின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.;
டெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் செயல்பட்டு வருகிறார். இவர் வரும் 23ம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் மூத்த நீதிபதியாக உள்ள சூர்யகாந்த் சுப்ரீம் கோட்டின் 53வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2026 ஆண்டு பிப்ரவரி 9ம் தேதிவரை தலைமை நீதிபதியாக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி சூர்யகாந்தின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளிவந்துள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, சூர்யகாந்த் மற்றும் அவரது மனைவியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.17 கோடி என தெரியவந்துள்ளது.