திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் 30ம் தேதி வரை வி.ஐ.பி தரிசனம் ரத்து

கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர்.

Update: 2024-05-24 10:28 GMT

திருப்பதி,

ஆந்திர மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், மற்றும் திருவிழா போன்ற நேரங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது.மேலும், கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வரும் ஜூன் 30ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.மேலும், எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.,

Tags:    

மேலும் செய்திகள்