இரவு நேர பணியில் பெண்கள் ஈடுபடலாம்-ஒடிசா அரசு அனுமதி
இரவு நேர பணிகளில் குறைந்தது 3 பெண் ஊழியர்கள் இருக்க வேண்டும்;
புவனேசுவரம்,
ஒடிசா மாநில அரசு வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேர பணிகளில் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து ஒடிசா தொழிலாளர் துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேர பணிகளில் பணிபுரிய அனுமதி வழங்கப்படுகிறது. இரவு நேர பணிகளில் குறைந்தது 3 பெண் ஊழியர்கள் இருக்க வேண்டும். அவர்களை அழைத்து சென்று அவர்கள் இருப்பிடங்களில் இறக்கிவிட ஜி.பி.எஸ். கண்காணிப்பு அமைப்புடன் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இரவு நேரத்தில் இளம் பருவ பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெண் ஊழியர்கள் பணிபுரியும் பணியிடங்களுக்கு அருகில் கழிப்பறை, குடிநீர் வசதிகளை வழங்க வேண்டும். கண்காணிப்பு கேமரா, மின் வசதி இருக்க வேண்டும். பெண் ஊழியர்கள் இரவில் வேலை செய்ய விருப்பம் தெரிவித்து எழுத்துப்பூர்வ ஒப்புதலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுளளது.