காதலியை கொலை செய்த வாலிபர் கைது
வாலிபருக்கு காதலியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.;
புனே,
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் பிசோலி பகுதியை சேர்ந்தவர் திலாவர் சிங் (வயது25). மெக்கானிக். இவர் தெகுரோடு பகுதியை சேர்ந்த வீட்டு வேலை செய்து வந்த மேரி மல்லேஷ்(26) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்தநிலையில் வாலிபருக்கு காதலியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் நேற்று முன்தினம் காதலியுடன் வாகாட் பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்றார். அப்போது திலாவர் சிங் காதலியின் செல்போனை வாங்கி பார்த்தார்.
செல்போனில் காதலி வேறு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்ததை திலாவர் சிங் பார்த்தார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அவர் கத்தியால் காதலியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வாலிபர் போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார். இதையடுத்து போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு வாலிபர் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் புனேயில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.