வீடியோக்கள் மூலம் 3 ஆண்டுகளில் ரூ. 21 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டிய இந்திய யூடியூபர்கள்

உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளம் யூடியூப்.;

Update:2025-05-02 16:22 IST

 

டெல்லி,

உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளம் யூடியூப். இதில் பலர் வீடியோக்களை, பதிவேற்றம் செய்தும் பதிவிறக்கம் செய்தும் வருகின்றனர்.

வீடியோக்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வீடியோக்களை பதிவிடுபவர்களுக்கு யூடியூப் நிறுவனம் பணம் வழங்கி வருகிறது.

அந்த வகையில் வீடியோக்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் இந்திய யூடியூபர்கள் 21 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர். இது தொடர்பாக யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளில் இந்திய யூடியூப் படைப்பாளர்களுக்கு ரூ. 21 ஆயிரம் கோடி செலுத்தியுள்ளோம். அதேவேளை, இந்தியாவில் யூடியூபை மேலும் மேம்படுத்த ரூ. 850 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

யூடியூப் தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதில் உலகம் முழுவதும் இதுவரை 20 பில்லியன் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்