உளுந்தூர்பேட்டை அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

திருநாவலூர் அருகே 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதை கடத்தி வந்த ஆந்திராவை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.;

Update:2025-03-11 03:20 IST

உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு பகுதியில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கையில் பெரிய பையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து வந்து கொண்டிருந்த நபரை போலீசார் மடக்கினர். தொடர்ந்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 12 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.

பின்னர் இதனை கடத்தி வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தாடி ராஜிவை போலீசார் கைது செய்தனர். இதனிடையே அவரிடம் இருந்த 12 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் தாடி ராஜி கஞ்சாவை எங்கிருந்து கடத்தி வந்து எங்கு கொண்டு செல்ல இருந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

Tags:    

மேலும் செய்திகள்