இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் டிசம்பர் 24ம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.;
கோப்புப்படம்
ராமேஸ்வரம்,
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி 17 பேர் கொண்ட குழு ஒன்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றது. அப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி 17 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இரண்டு விசை படகுகளை பறிமுதல் செய்தனர்
இந்நிலையில் அவர்களின் சிறைக்காலம் முடிந்ததால் அவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 13 பேருக்கு விடுதலை அளிக்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்து பிடிபட்ட நிலையில் மீண்டும் இந்த செயலை செய்ததால் வருகிற 12ம் தேதி வரை அவர்களுக்கு தண்டனை நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட 13 பேர் இன்னும் இரண்டு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.