கரூர்: அமராவதி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.;

Update:2025-04-23 20:53 IST

கோப்புப்படம் 

கரூரில் அமராவதி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கரூர் மாவட்டம் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில் 2 சிறுவர்கள் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறுவர்களின் உடல்களை மீட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்