புழல் ஏரியில் இருந்து 200 கனஅடி உபரிநீர் திறப்பு
பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;
சென்னை,
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகளில் இருந்து அவ்வப்போது நீர் திறக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் இருந்து தற்போது 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.