23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

Update:2024-12-23 08:59 IST
Live Updates - Page 2
2024-12-23 11:57 GMT

கேல் ரத்னா விருது 2024: பரிந்துரை பட்டியலில் மனு பாக்கர் பெயர் இல்லை

இந்த ஆண்டிற்கான கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகியோரின் பெயர்கள் உள்ளன.

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கல பதக்கங்கள் வென்று சரித்திர சாதனை படைத்த மனு பாக்கரின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. 

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் விளையாட்டு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

2024-12-23 10:44 GMT

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறையை மத்திய கல்வித்துறை அமைச்சகம் ரத்து செய்கிறது. இறுதித்தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்கு 2 மாதங்களுக்குள் மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2024-12-23 08:22 GMT

தேர்தல் சட்டத்திருத்தம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

தேர்தலில் வெளிப்படைத்தன்மையை ஒழிக்கும் நோக்கில் பாஜக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது. ஆபத்தான சட்டத்திருத்தத்தால் மக்களாட்சி மிகப்பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.

2024-12-23 07:46 GMT

நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி:-

மராட்டிய மாநிலம் புனே நகரில் உள்ள கேஸ்னந்த் பாடா பகுதிக்கு அருகே உள்ள சாலை நடைமேடையில் பல தொழிலாளர்கள் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே சென்ற லாரி நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவரக்ள் மீது மோதியது. இதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். 

2024-12-23 07:25 GMT

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக சென்னை தமிழர் ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

2024-12-23 07:24 GMT

தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக 84 வீரர், வீரங்கனைகளுக்கு பல்வேறு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

2024-12-23 07:02 GMT

அரசு ஊழியரின் சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் காளிப்பிரியனின் சொத்து விபரங்களை, ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில், 2 மாதங்களில் இதனைப் பரிசீலித்து முடித்துவைக்க மாநில தகவல் ஆணையத்திற்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்