மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்ட 42 இந்தியர்கள் விபத்தில் உயிரிழப்பு - செல்வப்பெருந்தகை இரங்கல்
புனித பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது அவசியம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;
சென்னை,
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“தெலுங்கானாவில் இருந்து மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்ட 42 இந்தியர்கள் பேருந்து விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. புனித நோக்கத்துடன் பயணித்த பெண்கள், குழந்தைகள், மூத்தவர்கள் உள்ளிட்ட பலர் இவ்வாறு உயிரிழந்தது மனதை உலுக்கும் கொடூரமான பேரிழப்பாகும். ஒரு குடும்பத்தில் யார் உயிரிழந்தாலும் அதன் வாழ்க்கை சிதறும். இந்த வேதனையை வார்த்தைகள் கூற முடியாது.
இந்த துக்க நேரத்தில் அவர்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் மற்றும் தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்க வேண்டும். வெளிநாடுகளுக்கும், புனித இடங்களுக்கு பயணம் செய்யும் யாத்திரிகர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவது அவசியம். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.