மழை காரணமாக பா.ம.க. கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

இளைஞர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டமும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-11-17 15:14 IST

விழுப்புரம்,

மழை காரணமாக வன்னியர் சங்க கூட்டம், இளைஞர் சங்க கூட்டம் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக பா.ம.க. அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“மழையின் காரணமாக நாளை 18.11.2025 அன்று நடைபெற இருந்த பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டமும், நாளை மறுநாள் 19.11.2025 அன்று நடைபெற இருந்த இளைஞர் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கூட்டமும் ஒத்திவைக்கப்படுகிறது. மேற்படி இரண்டு கூட்டங்கள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்