தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழுந்து 5 மாத பெண் குழந்தை பலி
வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்தில் இருந்து தேங்காய் ஒன்று குழந்தை தன்விகா மீது விழுந்தது.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த மலையாம்புரவடை கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு தன்விகா என்ற 5 மாத பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தன்விகாவை தாத்தா ராஜா கையில் வைத்துக்கொண்டு வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்தில் இருந்து தேங்காய் ஒன்று குழந்தை தன்விகா மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட குழந்தையை உடனடியாக சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை குழந்தை தன்விகா உயிரிழந்தது. தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழுந்து பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.