தமிழகத்தில் கூடுதலாக 50 ஆதார் பதிவு மையங்கள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ் இலக்கியம், மொழியியல் பயிலும் மாணவர்களுக்கு மொழி தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும்.;

Update:2025-04-26 00:12 IST

சென்னை,

சட்டசபையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு,

* தமிழகத்தில் ஆதார் பதிவு முகமையாக, எல்காட் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தால் தற்போது 266 ஆதார் பதிவு உள்ளது. ஆதார் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில் உள்ளாட்சி அலுவலகங்களில் கூடுதலாக 50 ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்படும்.

* பொதுமக்கள் அரசு சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் அணுக கூடிய வகையில் இ-சேவைகள் மற்றும் பிற துறைகள் சார்ந்த சேவைகள் வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒருங்கிணைந்து வழங்கப்படும்.

* தமிழ் இலக்கியம், மொழியியல் பயிலும் மாணவர்களுக்கு மொழி தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும்.

* தொழில்நுட்ப புத்தொழில் நுட்ப நிறுவனங்கள் வளமிக்க செயல்முறைகளை உள்ளடக்கிய வன்பொருளை தயாரிக்கின்றன. அதில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது என்பதனை ஊக்குவிக்க அரசு ஆர்வமாக உள்ளது. எனவே அதற்கான வடிவமைப்பு ஒன்று வெளியிடப்படும். அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையின் கீழ் ஒரு புத் தொழில் நிறுவனத்திற்கு 75 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வீதம் வழங்கப்படும்.

இவ்வாறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்