ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களில் கடந்த 47 நாட்களில் 50,490 டன் குப்பைகள் அகற்றம்

குப்பைகள் அகற்றப்பட்டு கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.;

Update:2025-09-04 12:46 IST

ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் மண்டலங்களில் கடந்த 19.07.2025 முதல் நேற்று வரையிலான 47 நாட்களில் 50,490 டன் குப்பைகள் அகற்றப்பட்டு திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலைகள், தெருக்கள், கடற்கரைகள், பேருந்து நிறுத்தங்கள், பாலங்கள், பூங்காக்கள், மயான பூமிகள், பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தினசரி சராசரியாக 6,300 டன் குப்பைகளை அகற்றி திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

இதில், ராயபுரம் மண்டலம் (மண்டலம்-5) திரு.வி.க நகர் மண்டலம் (மண்டலம்-6) ஆகிய இரண்டு மண்டலங்களில் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த 19.07.2025 முதல் நேற்று (03.09.2025) வரையிலான 47 நாட்களில் மண்டலம்-5ல் 29,425. 21 டன், மண்டலம்-6ல் 21,065. 04 டன் என மொத்தம் 50,490. 25 டன் குப்பைகளை அகற்றி கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மண்டலம்-5 மற்றும் மண்டலம்-6ல் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணிக்காக 483 மின்கல வாகனங்கள், குப்பைகள் சேகரிப்பதற்காக 16 எண்ணிக்கையில் 5 டன் கொள்ளளவில் 16 டிப்பர் லாரிகள், 8 கன மீட்டர் கொள்ளளவில் 40 காம்பாக்டர் வாகனங்கள், 14 கன மீட்டர் கொள்ளளவில் 34 காம்பாக்டர் வாகனங்கள், 18 கன மீட்டர் கொள்ளளவில் 6 காம்பாக்டர் வாகனங்கள், 203 டாட்டா ஏஸ் வாகனங்கள், 12 கனரக வாகனங்கள், 6 ஜேசிபி இயந்திரங்கள் என மொத்தம் 800 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு மண்டலங்களிலும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சுழற்சி முறையில் கண்காணித்திட உரிய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களது கண்காணிப்பில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்த இரண்டு மண்டலங்களிலும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்பட்டு மக்களுடைய சுகாதாரத்தை பேணும் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்