சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்
வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர்;
கோப்புப்படம்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக திருச்சி செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர். அதில் ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசை சோதனை செய்தனர். அதில் 7 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.3.5 லட்சம் ஆகும்.
இதேபோல, நேற்று காலை உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக ராமேசுவரம் செல்லும் வாராந்திர ரெயிலில் கடத்தி வந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதலான கஞ்சா மற்றும் புகையிலை பொருளை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரெயிலில் அவற்றை கடத்தி வந்தது யார்? என ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.