தோழி படிக்கும் பள்ளியில் சேர்க்காததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை
தோழி படிக்கும் பள்ளியில் தன்னை சேர்க்காததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கோப்புப்படம்
மதுரை தல்லாகுளம் விசாலாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (39 வயது). இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், அவர் தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். பிரியாவின் மகள் அர்ச்சனா (14 வயது), அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் அர்ச்சனாவின் தோழி மதுரையில் உள்ள தனியார் பள்ளிக்கு மாறியதாக தெரிகிறது. இதனால் தன்னையும் தோழி படிக்கும் பள்ளியில் சேர்த்து விடுமாறு அர்ச்சனா கூறியுள்ளார். இதற்கு பிரியா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அர்ச்சனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.