மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ

வனப்பகுதியில் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-05-12 12:37 IST

தென்காசி,

தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே உள்ள வெள்ளக்கால் தேரி பீட் பகுதியில் காட்டுத்தீ பரவியது. இது குறித்து தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் பரவியதால் வனத்துறையினருக்கு தீயை அணைப்பது பெரும் சவாலானதாக மாறியது.

இரண்டாவது நாளாக இன்றும் பற்றி எரியும் காட்டு தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வனப்பகுதியில் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்