சென்னையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கத்தை வங்கியில் விட்டுச்சென்ற பெண் - போலீஸ் தீவிர விசாரணை

தங்கத்தை விட்டுச்சென்ற பெண் 4 நாட்களாகியும் வங்கிக்கு திரும்பி வரவில்லை.;

Update:2025-12-11 21:46 IST

சென்னை,

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் தனியார் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த 5-ந்தேதி வங்கிக்கு பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், தனது கணவருக்கு வங்கியில் கணக்கு இருப்பதாகவும், தனக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆனால் அதற்கான ஆவணங்களை அவர் எடுத்து வரவில்லை. இதனால் ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றார்.

அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் பை ஒன்று இருந்ததை வங்கி ஊழியர்கள் பார்த்துள்ளனர். அதை பரிசோதித்து பார்த்ததில் 1 கிலோ எடை கொண்ட தங்க கட்டியும், 256 கிராம் தங்க சங்கிலி மற்றும் வளையல்களும் இருந்துள்ளது. ஆனால் கடந்த 4 நாட்களாகியும் அந்த பெண் வங்கிக்கு திரும்பி வரவில்லை.

இதனால் வங்கி அதிகாரிகள், வேளச்சேரி போலீசில் புகார் அளித்தனர். மேலும் அந்த பெண் தனது பெயர் சர்மிளா பானு என வங்கி அதிகாரிகளிடம் அறிமுகம் செய்தது தெரிந்தது. மாயமான அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பெண் விட்டுச்சென்ற நகை மற்றும் தங்க கட்டியின் மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்