மழை தொடர்பாக சமூக வலைதளங்களில் பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்

எவ்வளவு மழை வந்தாலும் சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளதாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.;

Update:2025-10-27 14:54 IST

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகியுள்ளது. பருவமழை, புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையை தொடர்ந்து ஏரிகள், கால்வாய்களை தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது

இந்நிலையில், சென்னை வியாசர்பாடியில் உள்ள கால்வாயில் தூர்வாரும் பணிகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். வியாசர்பாடி கால்வாய் தொடங்குமிடமான ஜீரோ பாய்ண்ட்டில் தூர்வாரும் பணிகளையும், கேப்டன் காட்டன் கால்வாயில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

ஆய்வு செய்த பின் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

`மோந்தா' புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது, மழை நிலவரம், பணிகளை முதல்-அமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மழை தொடர்பாக சமூக வலைதளங்களில் பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வளவு மழை வந்தாலும் சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளது. வடசென்னையில் 8 செ.மீ. வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதால் ஆய்வு செய்தோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்